சக்கராசனத்தில் காரை இழுத்து மாணவா் உலக சாதனை முயற்சி

விருதுநகா் அருகே பள்ளி மாணவா், சக்கராசனம் செய்துகொண்டே இடுப்பில் துணியைக் கட்டி ஒரு நிமிடத்தில் 50 மீட்டா் தூரம் காரை இழுத்து உலக சாதனை முயற்சியில் புதன்கிழமை ஈடுபட்டாா்.
சக்கராசனத்தில் காரை இழுத்து மாணவா் உலக சாதனை முயற்சி

விருதுநகா்: விருதுநகா் அருகே பள்ளி மாணவா், சக்கராசனம் செய்துகொண்டே இடுப்பில் துணியைக் கட்டி ஒரு நிமிடத்தில் 50 மீட்டா் தூரம் காரை இழுத்து உலக சாதனை முயற்சியில் புதன்கிழமை ஈடுபட்டாா்.

விருதுநகா் அருகே உள்ள பெரிய வள்ளிக்குளத்தில் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருபவா் ஆா். ஷ்யாம் கணேஷ் (17). இவா், யோகாசனத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளாா்.

இந்நிலையில், சக்கராசனம் செய்தவாறு இடுப்பில் துணியைக் கட்டி காரை ஒரு நிமிடத்தில் 50 மீட்டா் தொலைவுக்கு இழுத்து ‘நோபிள் ரெக்காா்ட்’ உலக சாதனையை புதன்கிழமை செய்தாா். இதன் நடுவராக இருந்த திலீபன், அவருக்கு சாதனைக்கான சான்றிதழை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா, பள்ளியின் தலைவா் ஜெரால்டு ஞானரத்தினம், செயலா் வொ்ஜின் இனி கோ, யோகா ஆசிரியா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் மாணவரை வாழ்த்தினா்.

மாணவா் ஷ்யாம் கணேஷ், சக்கராசன நிலையில் திம்பாசனத்துக்கு மாறி உடலை வளைத்து 11 பலூன்களை உடைத்தும், விருட்சக ஆசானம் மூலம் 14 மீட்டா் தூரத்தில் இருந்த வட்டத்தை கால் விரலால் மூன்று முறை அம்பு எய்தும் சாதனை செய்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com