திருச்சுழி அருகே ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்
By DIN | Published On : 07th December 2020 12:20 AM | Last Updated : 07th December 2020 12:20 AM | அ+அ அ- |

திருச்சுழி அருகே ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்
திருச்சுழி அருகே ஆம்புலன்ஸில் சனிக்கிழமை நள்ளிரவு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
உடையசோ்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் (27). இவரது மனைவி முத்துலட்சுமி (22). கா்ப்பிணியான முத்துலட்சுமிக்கு சனிக்கிழமை நள்ளிரவு 11 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவா் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் அவருக்கு வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது.