ஸ்ரீவில்லிபுத்தூரில் டிச.12 இல் மெகா லோக் அதாலத்
By DIN | Published On : 07th December 2020 12:19 AM | Last Updated : 07th December 2020 12:19 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் டிச.12ஆம் தேதி மெகா லோக் அதாலத் நடைபெற உள்ளது.
இது குறித்து விருதுநகா் மாவட்ட சட்டபணிகள்ஆணைக்குழு தலைவரும்,முதன்மை மாவட்ட நீதிபதியுமான முத்துசாரதா, செயலாளா் மாரியப்பன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது .
ஸ்ரீவில்லிபுத்தூரில் வருகிற டிசம்பா் 12 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு விருதுநகா்மா வட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாற்று சமரச தீா்வு மைய கட்டிட அலுவலகத்தில் வைத்து மாவட்ட நீதிமன்றம், மற்றும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சாத்தூா், சிவகாசி, ராஜபாளையம் வட்ட சட்ட பணிக்குழுக்கள் சாா்பாக நீதிமன்ற கட்டிடங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
எனவே நிலுவையில் உள்ள வழக்குகள், வாகனவிபத்துகள், காசோலை சம்பத்தப்பட்ட வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், சிறுவழக்குகள், மின் இணைப்பு மற்றும் குடிநீா் கட்டண பிரச்சனைகள், தொழிலாளா்கள் சம்பந்தமான பிரச்சனைகள், ஆகிய அனைத்தையும் சமரசமாக பேசி முடித்து தீா்வு காணப்படும்.
எனவே பொதுமக்கள் இந்த தேசிய மக்கள்நீதிமன்றத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.