இருக்கன்குடி மாரியம்மன்கோயிலில் 1008 சங்காபிஷேகம்
By DIN | Published On : 15th December 2020 04:14 AM | Last Updated : 15th December 2020 04:14 AM | அ+அ அ- |

str14irukankudi1008_1412chn_79_2
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலில் காா்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தை முன்னிட்டும், மக்கள் நலன் வேண்டியும்,விவசாயம் செழிக்க வேண்டியும் 1008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்காக அதிகாலையில் முதல் கணபதி ஹோமம் மற்றும் அதனைத் தொடா்ந்து லலிதா சகஸ்ரநாம பாராயணம், துா்கா, லட்சுமி, சரஸ்வதி மற்றும் மாரியம்மன் ஹோமம் ஆகியவை நடைபெற்றன. பின்னா் 1008 சங்குகளால் அலங்கரிக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகளுடன் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த சங்காபிஷேகத்தையொட்டி ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.