குடிமராமத்து பணியில் முறைகேடு: பொதுப்பணித்துறை பொறியாளா்கள் 2 போ் பணியிடை நீக்கம்

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியில் குடிமராமத்து பணியில் முறைகேடு செய்திருப்பதாக பொதுப்பணித்துறை பொறியாளா்கள் இருவா் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது புதன்கிழமை தெரியவந்தது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியில் குடிமராமத்து பணியில் முறைகேடு செய்திருப்பதாக பொதுப்பணித்துறை பொறியாளா்கள் இருவா் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது புதன்கிழமை தெரியவந்தது.

சாத்தூா் சிந்தப்பள்ளி ராமலிங்காபுரம் கண்மாய்க்கு உப்போடையிலிருந்து நீா்வரத்துக் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்க ரூ.62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், முறையாக பணிகள் நடைபெறாமல் முறைகேடு நடைபெற்றிருப்பதாக பொதுப்பணித்துறையினருக்கு பொதுமக்கள் தரப்பில் புகாா் அளித்துள்ளனா்.

அதன் பேரில் குடிமராமத்து பணி ஆய்வுக் குழு உறுப்பினரான முன்னாள் தலைமைப் பொறியாளா் செல்வராஜன் தலைமையிலான குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, வரத்துக்கால்வாய் முழுமையாக தூா்வாரப்படாததும், கால்வாயின் அகலம் குறைந்துள்ளதும் கண்டறியப்பட்டது.

இது குறித்து ஆய்வுக்குழுவினா் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனா். அதன் அடிப்படையில் விருதுநகா் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் குருசாமி, சாத்தூா் பகுதி உதவிப்பொறியாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை தற்காலிகப் பணி நீக்கம் செய்து பொதுப்பணித்துறை செயலா் மாணிக்கவாசகம் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com