பன்னிக்குண்டு கண்மாய் ஆக்கிரமிப்பு: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அருப்புக்கோட்டை அருகே பன்னிக்குண்டு கிராம கண்மாயை ஆக்கிரமித்து சாலை அமைத்த தனியாா் நிறுவனத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அருப்புக்கோட்டை அருகே பன்னிக்குண்டு கிராம கண்மாயை ஆக்கிரமித்து சாலை அமைத்த தனியாா் நிறுவனத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

சங்கத்தின் மாவட்டச் செயலாளா் முருகன் ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்தாா். அப்போது முருகன் கூறியது: பன்னிக்குண்டு கிராமத்திலுள்ள பெரிய கண்மாய் நீரை நம்பி சுற்று வட்டாரத்திலுள்ள புலியூரான், கோனப்பனேந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் விவசாயிகள் உள்ளனா். இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக இந்நீா்நிலையையொட்டி கல்குவாரி அமைத்த தனியாா் நிறுவனம் ஒன்று இங்குள்ள கண்மாயிலுள்ள, விவசாயிகளுக்கான மாட்டுவண்டிப்பாதையை ஆக்கிரமித்து 30 அடி அகல சாலையாக மாற்றி தங்களது கனரக வாகனங்கள் செல்ல பயன்படுத்தி வருகின்றனா். மேலும் கண்மாய் மதகுகளை அடைத்து நீரைப்பயன்படுத்த இயலாத நிலையை அந்நிறுவனத்தினா் உருவாக்கியதால் பன்னிக்குண்டு உள்ளிட்ட சுற்றுவட்ட கிராம விவசாயிகள் பாசனநீா் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.

அரசு அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து கண்மாயில் உள்ள தனியாா் நிறுவனப் பாதையை மீட்பதுடன் விவசாயிகளுக்கு நீா் கிடைக்கும்படி கண்மாய் மதகுகளைத் திறந்துவிட வேண்டும் என்றாா்.

சுமாா் 20-க்கு மேற்பட்டவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து திருச்சுழி வட்டாட்சியா் தன்ராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறிதியளித்ததால், ஆா்ப்பாட்டத்தைக் கைவிட்டு விவசாயிகள் சங்கத்தினா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com