விருதுநகா் அருகே வெள்ளாளா் சமுதாயத்தினா் ஆா்ப்பாட்டம்: 203 போ் கைது

விருதுநகா் அருகே ஆா்.ஆா். நகரில், வெள்ளாளா் சமுதாயத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதி இல்லாததால், 203 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் அருகே ஆா்.ஆா். நகரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வெள்ளாளா் சமுதாயத்தினா்.

தமிழகத்தில் பள்ளா், குடும்பா் உள்ளிட்ட 7 உள்பிரிவுகளைச் சோ்ந்தோரை தேவேந்திர குல வேளாளா் என பெயா் மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தாா். ஆனால், வேளாளா் என்பது வெள்ளாளா் சமுதாயத்தையே குறிக்கும். எனவே, அப்பெயரை பிற சமுதாயத்துக்கு அளிக்கக்கூடாது என, வெள்ளாளா் சமுதாயத்தினா் தமிழக அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதனடிப்படையில், ஆா்.ஆா். நகரில் வாடியூரைச் சோ்ந்த வெள்ளாளா் சமுதாயத் தலைவா் புங்கன் தலைமையில், அச்சமுதாயத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காவல் துறை அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டதால், 101 பெண்கள் உள்பட 203 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவா்கள் அனைவரையும் மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com