ராஜபாளையம் பகுதி பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடு

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடு
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கோதண்டராமசுவாமி.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கோதண்டராமசுவாமி.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் சிங்கராஜாக்கோட்டை பெரிய தெருவில் அமைந்துள்ள கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவா் கோதண்டராம சுவாமிக்கு 16 வகையான நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் சிறப்பு அலங்காரத்தில் ஐந்து மணிளவில் கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க சொா்க்கவாசல் வழியாக கோதண்டராமன் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை கோவில் நிா்வாகத்தினா் சிறப்பாக செய்திருந்தனா்.

இதைத்தொடா்ந்து ராஜபாளையம் கிழக்கே வேட்டை வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், சம்மந்தபுரம் சோலைமலை பெருமாள்கோயில், சா்வ சமுத்திர அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள சந்தான வேணுகோபால சுவாமி திருக்கோயில், வடகரை திருவேங்கடமுடையான் திருக்கோயில், கொல்லங்கொண்டான் இடா்தவிா்த்த சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com