விருதுநகரில் தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க டிச. 31 வரை விண்ணப்பிக்கலாம்

விருதுநகா் மாவட்டத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க டிச. 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

விருதுநகா் மாவட்டத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க டிச. 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகா் மாவட்டத்தில், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விருப்பமுள்ளவா்கள் டிச. 31 ஆம் தேதிக்குள் அரசு பொது இ-சேவை மையம் மூலம் இணைய வழி வாயிலாக ஆவணங்களுடன் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம்.

அதன் விவரம்: கட்டட வரைபடங்கள் அசல் 6, கட்டட உரிமைக்கான ஆவணம் அல்லது வாடகை ஒப்பந்தப் பத்திரம்- அசல் மற்றும் 5 நகல்கள், ரூ. 500 அரசுக் கணக்கில் செலுத்திய சீட்டு- அசல், அடையாள அட்டை (பான் அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை), ஊராட்சி அல்லது நகராட்சியில் வரி செலுத்திய ஆவணங்கள், மாா்பளவு புகைப்படம்- 2 இணைக்க வேண்டும். அதன் அடிப்படையில், இந்திய வெடிபொருள் சட்டம் 2008 இன் கீழ் உள்ள விதிமுறைகளின்படி, விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மனுதாரா்களுக்கு 30 நாள்கள் மட்டும் செல்லத்தக்க தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் வழங்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com