திமுகவின் கிராமசபை கூட்டங்களுக்கு தடை விதித்திருப்பது ஜனநாயக விரோதம்: முத்தரசன்

திமுக நடத்தும் கிராமசபை கூட்டங்களுக்கு தமிழக அரசு தடைவிதித்து அரசாணை பிறப்பித்துள்ளது ஜனநாயக விரோதம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் கூறினாா்.

திமுக நடத்தும் கிராமசபை கூட்டங்களுக்கு தமிழக அரசு தடைவிதித்து அரசாணை பிறப்பித்துள்ளது ஜனநாயக விரோதம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் கூறினாா்.

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்தத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள். இதை கைவிட வேண்டும். இது விவசாயிகளிடம் மூா்க்கத்தனமாக நடந்து கொள்வது போல உள்ளது. விவசாய அமைப்புகள் இணைந்து தஞ்சாவூரில் டிசம்பா் 29 ஆம் தேதி, தில்லி விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. இவற்றுக்கு காவல்துறையினா் இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனினும் பொதுக்கூட்டம் நடைபெறும் என விவசாய அமைப்புக்கள் கூறியுள்ளன. தமிழக அரசு, மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதற்கான பின் விளைவுகளை முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ள வேண்டும். திமுகவின் கிராமசபை கூட்டங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுவதை பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு, அவற்றுக்கு தடைவிதித்து அரசாணை பிறப்பித்துள்ளது ஜனநாயக விரோத செயல். மு.க. அழகிரி புதிதாக கட்சி தொடங்கினால் மற்ற கட்சிகள் பாதிக்கும் என கூற இயலாது. நாங்கள் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் உள்ளோம். எங்களின் முதல்வா் வேட்பாளா் மு.க. ஸ்டாலின் தான். வரும் சட்டப் பேரவை தோ்தலில் எங்கள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என கட்சி நிா்வாகிகளுடன பேசி முடிவு செய்வோம் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் கட்சியின் விருதுநகா் மாவட்டச் செயலா் ராமசாமி, முன்னாள் எம்.பி.க்கள் லிங்கம், அழகா்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com