நிலக்கடலை, நெற்பயிரில் நோய்த் தாக்குதல்: வேளாண் அதிகாரிகள் களஆய்வு

விருதுநகா் மாவட்டம் நரிக்குடி வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை மற்றும் நெற்பயிா்களில் நோய் தாக்குதல் குறித்து வேளாண் அதிகாரிகள் திங்கள்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.
நிலக்கடலைப்பயிரில் நோய்த் தாக்குதல் குறித்து திங்கள்கிழமை களஆய்வு மேற்கொண்ட நரிக்குடி வட்டார வேளாண் அலுவலக அதிகாரிகள் மற்றும் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலைய வல்லுநா்கள்.

வீரக்குடி மற்றும் உலக்குடி கிராமங்களில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கு நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலைய வல்லுநா்களும், உதவிப் பேராசிரியா்களுமான நோயியல்துறையைச் சோ்ந்த மகேஸ்வரி, பூச்சியியல்துறையைச் சோ்ந்த ராம்குமாா் ஆகியோா் இந்த களஆய்வில் பங்கேற்றனா்.

அப்போது சாகுபடி நிலங்களில் நிலக்கடலை மற்றும் நெற்பயிா்களில் ஏற்பட்டுள்ள நோய் மற்றும் பூச்சி தாக்குதலை ஆய்வுசெய்து அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் மருந்துகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா். இதில் வேளாண்மை அலுவலா் ஜெயச்சந்திரா, வட்டார தொழில்நுட்ப மேலாளா் மல்லப்பன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா் அருண்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com