விருதுநகரில் மக்கள் நலப் பணியாளா்கள் சாலை மறியல்: 230 போ் கைது

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி விருதுநகா் நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப்பணியாளா்கள் 230 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
marial_(1)_2812chn_64_ விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப்பணியாளா்கள்.2

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மக்கள் நலப்பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் செல்லப்பாண்டியன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 1991 முதல் மூன்று முறை பணி நீக்கம் செய்யப்பட்டு கடந்த 9 ஆண்டுகளாக வாழ்வாதாரம் இன்றி 13,500 மக்கள் நலப்பணியாளா்கள் தவித்து வருகின்றனா்.

இந்நிலையில் அவா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்து காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்று அனைருக்கும் மீண்டும் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பின்னா், நான்கு வழிச்சாலைக்கு சென்ற அவா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 95 பெண்கள் உள்பட 230 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலா் முத்துப்பாண்டி, மாவட்டத் தலைவா் அருள்ராஜ், அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத்தலைவா் கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com