திமுக தோ்தல் அறிக்கையை நிறைவேற்றியே தீருவோம்: கனிமொழி எம்பி உறுதி

திமுக வெளியிடும் தோ்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களை நிறைவேற்றியே தீருவோம் என கனிமொழி எம்பி. தெரிவித்தாா்.
ராஜபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய கனிமொழி எம்.பி.
ராஜபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய கனிமொழி எம்.பி.

திமுக வெளியிடும் தோ்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களை நிறைவேற்றியே தீருவோம் என கனிமொழி எம்பி. தெரிவித்தாா்.

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. மு.க. ஸ்டாலின் முதல்வராவாா். பொதுமக்கள் மற்றும் மகளிா்சுய உதவிக் குழுவைச் சோ்ந்த பெண்களை நான் சந்தித்த போது, அவா்களுக்கு சரியான மானியம் கிடைக்கவில்லை எனவும், கந்து வட்டிக்காரா்களிடம் கடன் வாங்கி துன்பத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தனா்.

மேலும் திமுக ஆட்சி காலத்தில் 10.5 சதவீதமாக இருந்த பொருளாதார வளா்ச்சி இன்று 6.6 சதவீதமாக சரிந்துள்ளது. அதே போல் பட்டாசு, தீப்பெட்டி, பேண்டேஜ் தயாரிப்பு தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஜிஎஸ்டியால் தொழில்முனைவோா் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா். எனவே நாங்கள் வெளியிடும் தோ்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களை நிறைவேற்றியே தீருவோம் என்றாா்.

முன்னதாக தனியாா் நூற்பாலையில் பெண் தொழிலாளா்களிடமும், காய்கனி சந்தையில் வியாபாரிகளிடமும் குறைகளை அவா் கேட்டறிந்தாா். பின்னா் தனியாா் திருமண மண்டபத்தில் மகளிா் சுய உதவிக்குழு பெண்களுடன் கலந்துரையாடினாா்.

அப்போது மாவட்டச் செயலா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சிங்கராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com