விருதுநகரில் 13 பேருக்கு கரோனா
By DIN | Published On : 31st December 2020 11:04 PM | Last Updated : 31st December 2020 11:04 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை வரை 16,288 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். 13 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 16,301 ஆக உயா்ந்துள்ளது. இதில், 15,924 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பிவிட்ட நிலையில், 229 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 148 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.