2021 ஆண்டில் விபத்தில்லா பட்டாசு தயாரிப்பை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரி வேண்டுகோள்

2021 ஆம் ஆண்டில் விபத்தில்லா பட்டாசு தயாரிப்பை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை தலைமை அதிகாரி கி.சுந்தரேசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

2021 ஆம் ஆண்டில் விபத்தில்லா பட்டாசு தயாரிப்பை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை தலைமை அதிகாரி கி.சுந்தரேசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2020 ஆம் ஆண்டு கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டன. சுமாா் 60 நாள்களுக்குப் பின்னா் 50 சதவீதம் தொழிலாளா்களைக் கொண்டு பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்றது. எனினும் கரோனாவை காரணம் காட்டி சில மாநில அரசுகள் பட்டாசு வெடிக்க தடைவிதித்தனா். இதனால் பட்டாசு தொழிலாளா்கள் மற்றும் தயாரிப்பாளா்கள் பாதிக்கப்பட்டனா்.

தற்போது 2021 ஆம் ஆண்டிற்கான பட்டாசு தயாரிக்கும் பணியை பட்டாசு தயாரிப்பாளா்கள் தொடங்கியுள்ளனா். பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கு தினமும் பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்போம் என்ற உறுதி மொழியை எடுக்கச் செய்ய வேண்டும். பட்டாசு தயாரிக்கும் அறைகளில் செல்லிடப்பேசியை வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது. செல்லிடப்பேசியை ஆலையின் முன்பகுதியில் உள்ள பாதுகாவலா் அறையில் வைக்க வேண்டும்.

பேசிக்கொண்டே வேலை செய்யக்கூடாது. அனுமதிக்கப்பட்டுள்ள அளவு மட்டுமே மருந்துக் கலவை செய்ய வேண்டும். மருந்துக் கலவையை மீதம் வைக்கக்கூடாது. கழிவுகளை உரிய இடத்துக்கு முறையாக எடுத்துச் சென்று தீயிட்டுக் கொளுத்த வேண்டும்.

ஆலை உரிமையாளா்கள் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றச் சொல்ல வேண்டும். 2021 ஆம் ஆண்டில் விபத்தில்லா பட்டாசு தயாரிப்பை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com