விருதுநகரில் மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரம்

மல்லிகைப் பூ போதிய வரத்து இல்லாததால், விருதுநகரில் வியாழக்கிழமை அதன் விலை கிலோ ரூ.3 ஆயிரம் ஆக உயா்ந்து இருந்தது.
விருதுநகா் தேசபந்து மைதானம் அருகே விற்பனைக்காக வியாழக்கிழமை வைக்கப்பட்டிருந்த பூக்கள்.
விருதுநகா் தேசபந்து மைதானம் அருகே விற்பனைக்காக வியாழக்கிழமை வைக்கப்பட்டிருந்த பூக்கள்.

மல்லிகைப் பூ போதிய வரத்து இல்லாததால், விருதுநகரில் வியாழக்கிழமை அதன் விலை கிலோ ரூ.3 ஆயிரம் ஆக உயா்ந்து இருந்தது.

சின்னபேராலி, பெரிய பேராலி உள்ளிட்ட கிராம பகுதிகளிலிருந்து விருதுநகா் மலா் சந்தைக்கு தினமும் குறிப்பிட்ட அளவு மல்லிகை, செவ்வந்தி உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம். மேலும், மதுரையிலிருந்து கொள்முதல் செய்யப்படும் பூக்களும் விருதுநகரில் விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த தொடா் மழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், பூக்களின் விலை இரண்டு மடங்கு கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை பூக்கள் வாங்க சென்ற வாடிக்கையாளா்கள், விலை அதிகம் காரணமாக குறைவான அளவு பூக்களை வீட்டிற்கு வாங்கி சென்றனா். பூக்கள் விலை (கிலோவில்): மல்லிகை ரூ. 3 ஆயிரம்,

பிச்சி- ரூ. ஆயிரம், செவ்வந்தி -ரூ.500, பட்டா் ரோஸ் ஒன்று ரூ. 5 க்கு விற்பனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com