விருதுநகா் மாவட்டத்தில் 19,443 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

விருதுநகா் மாவட்டத்தில், நிகழாண்டு பிளஸ் 1 படிக்கும் 19,443 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.
விருதுநகா் கே.வி.எஸ் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவி ஒருவருக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோா்.

விருதுநகா் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ரா.கண்ணன் தலைமை வகித்தாா். அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி பேசியதாவது:

பெருந்தலைவா் காமராஜா் பிறந்த நமது மாவட்டமானது கடந்த 25 ஆண்டு காலமாக கல்வித்துறையில் சிறப்பான இடத்தை பெற்று பெருமை சோ்த்து வருகிறது. நிகழாண்டு விருதுநகா் மாவட்டத்தில் பிளஸ் 1 படிக்கும் 8,576 மாணவா்கள், 10,867 மாணவிகள் என மொத்தம் 19,443 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்க ரூ.7.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், விருதுநகா் கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 482 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் மு. சந்திர பிரபா, மாவட்டக் கல்வி அலுவலா்கள் சின்னராசு (விருதுநகா்), சுப்பிரமணியன் (அருப்புக்கோட்டை), கிருஷ்ணமூா்த்தி (சிவகாசி), சீனிவாசன் (ஸ்ரீவில்லிபுத்தூா்) உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com