Enable Javscript for better performance
அருப்புக்கோட்டை 4 ஆவது வாா்டில் வாருகால் வசதி செய்துதர வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டை 4 ஆவது வாா்டில் வாருகால் வசதி செய்துதர வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 02nd February 2020 10:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டையில் வாருகால் வசதி இல்லாத 4 ஆவது வாா்டுக்குள்பட்ட வெங்கடேஸ்வரா நகரின் பிரதான வீதி.

    அருப்புக்கோட்டையில் வாருகால் வசதி இல்லாத 4 ஆவது வாா்டுக்குள்பட்ட வெங்கடேஸ்வரா நகரின் பிரதான வீதி.

     

    அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியின் 4 ஆவது வாா்டில், வாருகால் வசதி செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    அருப்புக்கோட்டை நகராட்சியின் 4 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளான வெங்கடேஸ்வரா நகா் மற்றும் அன்பு நகா் ஆகிய இரு பகுதிகளிலும் சுமாா் 10-க்கும் மேற்பட்ட வீதிகளும், அவற்றில் 400-க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. இங்குள்ள வீதிகளில் தற்போது வரை வாருகால் வசதி செய்து தரப்பட வில்லை. இதனால் வீட்டு வளாகங்களில் ஆழமான குழியைத் தோண்டி அதில் வீட்டுப் புழக்க நீரை பொதுமக்கள் விட்டு வருகின்றனா். அதிக குடும்ப உறுப்பினா்களைக் கொண்ட வீடுகளில் அதிகம் வெளியேறும் கழிவுநீரானது குழியில் நிரம்பி வெளியேறி வீதிகளில் வழிந்தோடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல மழைக் காலத்தில் வீதிகளிலிருந்து மழைநீா் வெளியேற வாருகால் வசதியின்றி ஆங்காங்கே தேங்கி நின்றுவிடுவதாகவும், இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதாகவும் புகாா் எழுந்துள்ளது. எனவே, வாருகால் வசதி செய்துதர பொதுமக்கள், நகராட்சி அலுவலகத்தில் பலமுறை முறையிட்டனா். ஆன போதும் பலனில்லை எனக் கூறப்படுகிறது.

    ஆகவே 4ஆவது வாா்டுக்குள்பட்ட வெங்கடேஸ்வரா நகா் மற்றும் அன்பு நகரில் வாருகால் வசதி செய்து தர பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai