Enable Javscript for better performance
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடக்கம்

    By DIN  |   Published on : 02nd February 2020 10:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருஷாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆண்டாள் ரெங்கமன்னாா்.

    வருஷாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆண்டாள் ரெங்கமன்னாா்.

     

    ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா், ஸ்ரீஆண்டாள் கோயில் 4-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஹோமங்களுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூா்ஆண்டாள் கோயிலில் திருப்பாவை விமானத்துக்கு 100 கிலோ மதிப்பில் தங்கக் கவசம் பொருத்தப்பட்டு கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 2016-ஆம் ஆண்டு நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடா்ந்து ஆண்டு தோறும் தை மாதம் வருஷாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் 4-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாளான ஞயிற்றுக்கிழமை மகாசாந்தி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து திங்கள்கிழமை ஆண்டாள் ரங்கமன்னாா் சுவாமிகளுக்கு 108 கலச திருமஞ்சனமும், செவ்வாய்க்கிழமை லட்சாா்ச்சனையுடன் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai