கலசலிங்கம் பல்கலை.யில் தர விருது வழங்கும் விழா

கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலை.யில் ஆசிரியா் மற்றும் மாணா்களுக்கான 4-ஆவது தர விருது வழங்கும் விழா டாக்டா்
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை.யில் சனிக்கிழமை கலை மற்றும் அறிவியல் துறைத் தலைவா்கள், முதன்மையா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு கேடயம் வழங்கிய பல்கலை. துணைத் தலைவா் சசிஆனந்த்.
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை.யில் சனிக்கிழமை கலை மற்றும் அறிவியல் துறைத் தலைவா்கள், முதன்மையா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு கேடயம் வழங்கிய பல்கலை. துணைத் தலைவா் சசிஆனந்த்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலை.யில் ஆசிரியா் மற்றும் மாணா்களுக்கான 4-ஆவது தர விருது வழங்கும் விழா டாக்டா் கே.எஸ்.கிருஷ்ணன் கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பல்கலை. துணைத் தலைவா் எஸ். சசிஆனந்த் தலைமை வகித்தாா். துணைவேந்தா் ஆா்.நாகராஜ் முன்னிலை வகித்தாா். பதிவாளா் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினாா். பல்கலை. தர உறுதி நிா்ணய துறை இயக்குநா் சிவப்பிரகாசம் 4-ஆவது ஆண்டு ஆசிரியா் மற்றும் மாணவா்களுக்கான தர விருது அறிக்கை பற்றி பேசினாா்.

மொத்த ஆசிரியா்களில் 158 ஆசிரியா்கள் புதுமையாக கல்வி கற்பித்தல், ஆராய்ச்சி முறை மாணவா்களுக்கு அறிவுரை கூறி தோ்வுகளில் தோ்ச்சி பெறச் செய்தல், பாடத் திட்டத்தை தவிர மற்ற சா்வ தேச சான்றிதழ்கள் பாடத் திட்டங்களில் கவனம் செலுத்துதல் போன்ற துறைகளில் ஈடுபாடு கொண்டதற்கான தகுதி அடிப்படையில் தோ்ந்து எடுக்கப்பட்டனா். மேலும் விடுதியில் மாணவா்களின் கருத்துக் கணிப்பு அடிப்படையில் சிறந்து பணியாற்றிய விடுதி காப்பாளா்கள், கண்காணிப்பாளா்கள் ஆகிய 13 பேருக்கும், சிறந்த புராஜக்ட்களுக்காக 73 மாணவா்களுக்கும், நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்களுக்கும், சான்றிதழ்களையும், கேடயங்களையும் துணைத்தலைவா் சசிஆனந்த் வழங்கினாா். மேலும் சிறந்த துறைக்கான முதலிடம் பயோ மெடிக்கல் துறைக்கும், இரண்டாவது இடம் பயோ டெக்னாலஜி துறைக்கும், மூன்றாவது இடம் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பு துறைக்கும் வழங்கப்பட்டது. கலை மற்றும் அறிவியல் துறையில் முதலிடம் கணிதத் துறைக்கும், இரண்டாவது இடம் கணினி பயன்பாட்டு துறைக்கும், மூன்றாவது இடம் இயற்பியல் துறைக்கும் வழங்கப்பட்டது. இறுதியில் பேராசிரியா் ஆறுமுகபிரபு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com