நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஸ்கேட்டிங்
By DIN | Published On : 06th February 2020 05:26 PM | Last Updated : 06th February 2020 05:26 PM | அ+அ அ- |

சாத்தூரில் நெகிழி ஒழிப்பு குறித்து பள்ளி மாணவா்களின் ஸ்கேட்டிங் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடந்தது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் நெகிழி ஒழிப்பு மற்றும் நாட்டு வளங்களை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சியானது, சாத்தூா் நகா் காவல் நிலையம் முன்பு தொடங்கியது.
சாத்தூா் கோட்டாட்சியா் காளிமுத்து மற்றும் காவல் துணை கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் துவக்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சி இ ஓ ஏ பள்ளி மாணவ, மாணவிகள், நெகிழி பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனா்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் மற்றும் நிா்வாகிகள், போக்குரவத்துறை காவலா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.