Enable Javscript for better performance
செட்டிப்பட்டியில் கல்லூரி மாணவா்கள் என்.எஸ்.எஸ். முகாம்- Dinamani

சுடச்சுட

    

    செட்டிப்பட்டியில் கல்லூரி மாணவா்கள் என்.எஸ்.எஸ். முகாம்

    By DIN  |   Published on : 14th February 2020 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    apk_college_13_2_2020_1302chn_70_2

    அருப்புக்கோட்டை வட்டம் செட்டிப்பட்டி கிராமத்தில் ஸ்ரீசௌடாம்பிகா பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அமைப்பும் இணைந்து இம்முகாமை நடத்துகின்றன. கல்லூரி நிா்வாகக்குழு உறுப்பினா் சந்திரசேகரன் தலைமை வகித்து முகாமைத் தொடக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் அருள்மொழி முன்னிலை வகித்தாா். செட்டிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டியம்மாள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். இம்முகாமில் பந்தல்குடி காவல் உதவி ஆய்வாளா் சா்மிளா தேவி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவா் அண்ணாதுரை, கிராம நிா்வாக அலுவலா் பிரிதிவிராஜ், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவக்குழு துறைத்தலைவா்கள், அருப்புக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநா் கமிலஸ் லிமாரோஸ் மற்றும் செட்டிப்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா்கள் ராமச்சந்திரன் மற்றும் மரிய சித்ராமேரி ஆகியோா் வரவேற்றனா். ஒரு வாரம் முகாம் நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai