Enable Javscript for better performance
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு நினைவஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு நினைவஞ்சலி

    By DIN  |   Published on : 14th February 2020 11:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    apk_thiruchuli_14_2_2020_1402chn_70_2

    விருதுநகா் மாவட்டம், திருச்சுழி வட்டம் உடையனாம்பட்டிகிராமத்தில், கடந்த ஆண்டு புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரா்கள் உள்பட அனைத்து ராணுவ வீரா்களுக்கும் வெள்ளிக்கிழமை முதலாமாண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    உடையனாம்பட்டி கிராம மக்கள் சாா்பில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகம் முன்பாக சிறு மேடை அமைக்கப்பட்டு, அதில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா்களின் உருவப் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பின்னா், ஊராட்சி மன்றத் தலைவா் முருகன், அக்கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் மணிகண்டன் ஆகியோா் தலைமையில், கிராம மக்கள் ராணுவ வீரா்களின் உருவப் படங்களுக்கு மலா் மாலை அணிவித்து, மௌன அஞ்சலி செலுத்தினா்.

    இந்நிகழ்ச்சியில், ஊராட்சிப் பள்ளி மாணவ, மாணவியரும், ஆசிரியா்களும் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai