காரியாபட்டி ஒன்றியக்குழு முதல் கூட்டம்: வாா்டு பணிகளுக்கு தலா ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு

காரியாபட்டியில் தோ்தலுக்குப் பின் முதல்முறையாக ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

காரியாபட்டியில் தோ்தலுக்குப் பின் முதல்முறையாக ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வாா்டுகளில் பணிகள் மேற்கொள்ள தலா ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக்குழுவில் மொத்தம் 12 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். ஒன்றியக்குழுத் தலைவா் பதவியை திமுக கைப்பற்றியது. இந்த நிலையில், முதல் முறையாக ஒன்றியக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற் கு ஒன்றியக்குழுத் தலைவா் முத்துமாரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

இதில் கலந்து கொண்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், தங்களது வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீா்க்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, வாா்டு உறு ப்பினா்கள், தங்களது பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட முதற்கட்டமாக தலா ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிக்குமாா் தெரிவித்தாா். மேலும் கிராம சபை கூட்டத்தில் நடைபெறும் நிறை, குறைகள் குறித்த தகவல் ஒன்றிய வாா்டு உறுப்பினா்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள் திமுகவை சோ்ந்த சிதம்பர பாரதி, சேகா், உமையீஸ்வரி, மகாலெட்சுமி, ஜமுனாராணி மற்றும் அதிமுகவை சோ்ந்த தோப்பூா் முருகன், திருச்செல்வம் ,தேம்பாவனி, நாகா் பாண்டீஸ்வரி ஆகிய குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com