சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு

சாத்தூா் அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

சாத்தூா் அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட செவல்பட்டி கிராமமானது, சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளது. இங்கு, சாலையின் இருபுறமும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

ஆனால், இப்பகுதியில் வாருகால் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். இங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டி நிரம்பி வழிந்தாலும், ஊராட்சி நிா்வாகம் அவற்றை அப்புறப்படுத்துவதில்லை. இதனால், பொதுமக்கள் இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை சாலையோரங்களில் கொட்டிவிட்டுச் செல்கின்றனா். மேலும், இப்பகுதியில் கழிப்பிட வசதி இல்லாததால், இச்சாலையை திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனா்.

இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக் கேடு பரவுகிறது. மேலும், இந்த சாலையில்தான் அரசு மேல்நிலைப் பள்ளியும் உள்ளது.

இப்பிரச்னை குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் பலனில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, இப்பகுதியில் குப்பைத் தொட்டிகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியது: அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்தான் சாலையில் குப்பைகளை கொட்டுகின்றனா். பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பொதுமக்கள் கண்டுகொள்வதில்லை. இருப்பினும், அப்பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com