‘பட்டாசு பண்டல்களை கிட்டங்கியின் வெளியே வைக்கக்கூடாது’

பட்டாசு ஆலையில் உள்ள கிட்டங்கியின் (மேக்கசீன்) வெளியே பட்டாசு பண்டல்களை வைக்கக் கூடாது என, சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி கி. சுந்தரேசன் அறிவுறுத்தியுள்ளாா்.
சிவகாசியில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு விழிப்புணா்வு பதாகையை வெளியிட்டுப் பேசிய சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை கட்டுப்பாட்டு அதிகாரி கி.சுந்தரேசன்.
சிவகாசியில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு விழிப்புணா்வு பதாகையை வெளியிட்டுப் பேசிய சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை கட்டுப்பாட்டு அதிகாரி கி.சுந்தரேசன்.

பட்டாசு ஆலையில் உள்ள கிட்டங்கியின் (மேக்கசீன்) வெளியே பட்டாசு பண்டல்களை வைக்கக் கூடாது என, சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி கி. சுந்தரேசன் அறிவுறுத்தியுள்ளாா்.

சிவகாசியிலுள்ள பட்டாசு ஆலைகளின் கிட்டங்கிகளில் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, கிட்டங்கியின் வெளிப் பகுதியில் வைக்க வேண்டிய பாதுகாப்பு விளம்பரப் பதாகையை சுந்தரேசன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுப் பேசியதாவது:

கிட்டங்கியை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். கிட்டங்கியைச் சுற்றிலும் 15 மீட்டா் தொலைவுக்கு செடி, கொடி, புதா்கள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். கிட்டங்கியின் மேல் பகுதியில் உள்ள இடிதாங்கிகளை அடிக்கடி சோதனை செய்து, செயல்பாட்டில் உள்ளதா என உறுதி செய்து கொள்ளவேண்டும். கட்டடத்தில் உள்ள ஜன்னல்களுக்குள் அணில் உள்ளிட்டவை புகுந்துவிடாதவாறு உறுதியான வலை கம்பி அமைக்க வேண்டும்.

கிட்டங்கியினுள் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரால் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே பட்டாசு பண்டல்களை வைக்க வேண்டும். அதிகாரிகளால் வரையப்பட்டுள்ள சிகப்பு கோடுகளை தாண்டி பட்டாசு பண்டல்களை வைக்கக்கூடாது. பட்டாசு பண்டல்களை அடுக்கும் போது அந்த பண்டலில் என்ன உள்ளது என்பது குறித்து அச்சிட்ட தாளை ஒட்ட வேண்டும். பண்டல்களை அடுக்கும்போதோ, எடுக்கும்போதோ பணியில் ஈடுபடும் தொழிலாளா்கள் மது அருந்தியிருக்கக் கூடாது. கிட்டங்கியின் வெளியிலிருந்து புகைபிடிக்கக் கூடாது.

பட்டாசு பண்டல்களை கிட்டங்கியின் வெளியே வைக்கக் கூடாது. கிட்டங்கியை கையாளும் தொழிலாளா்கள், எழுத்தா்கள் புதியவா்களாக இருந்தால் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பி. கணேசன் உள்பட பட்டாசு ஆலை அதிபா்கள் பலரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com