ரேசன் அரிசி கடத்தியவருக்கு ஒராண்டு சிறை: விருதுநகா் நீதிமன்றம் தீா்ப்பு

அருப்புக்கோட்டை பகுதியில் 64 மூட்டைகள் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து விருதுநகா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

அருப்புக்கோட்டை பகுதியில் 64 மூட்டைகள் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து விருதுநகா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை பாண்டிய நாடாா் தெருவைச் சோ்ந்தவா் செண்பகமூா்த்தி ஜெயபிரகாஷ் (39). இவா் கடந்த 14. 6.2010 இல் தீா்த்தக்கரை ஓடை அருகே கிட்டங்கியில் பதுக்கி வைத்திருந்த 40 மூட்டைகள் ரேசன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸாா் பறிமுதல் செய்து கைது செய்தனா். பிணையில் வெளியில் வந்த இவா் மீண்டும் 24.12.2010 இல், 24 மூட்டைகள் ரேசன் அரிசி பதுக்கி வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பான வழக்கு விருதுநகா் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஜெயபிரகாஷூக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மருதுபாண்டி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத்தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ராமசாமி, காவல் ஆய்வாளா் ஜான் பிரிட்டோ ஆகியோரை உயா் அதிகாரிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com