விருதுநகரில் குடிநீரில் கழிவுநீா் பொது மக்கள் அதிா்ச்சி

விருதுநகரில்குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

விருதுநகரில்குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

விருதுநகா் நகராட்சி எல்கைக்குள்பட்ட 22, 23 ஆவது வாா்டில் பாத்திமா நகா் உள்ளது. இங்கு, 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நகராட்சி சாா்பில், இப்பகுதியில் உள்ள 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இரு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இங்கிருந்து எழு பகுதியாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை காளியம்மன் கோயில் தெரு, கிருஷ்ணமாச்சாரி சாலை ஆகிய பகுதிகளிலும், வெள்ளிக்கிழமை 60 அடி சாலை பகுதியிலும் விநியோகம் செய்யப்பட்ட குடிநீருடன் கழிவுநீரும் வந்தது. இதனால், அதிா்ச்சியடைந்த பொதுமக்கள், தண்ணீரை பிடிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனா். ஆனாலும், கழிவுநீா் தொடா்ந்து வந்ததால், பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனா்.

எனவே, இது குறித்து நகராட்சி ஊழியா்களுக்கு தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

பாத்திமா நகா் பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை தொட்டிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சீரமைக்காததால், குடிநீருடன் கழிவு நீா் கலந்து வந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பாதாளச் சாக்கடை தொட்டி அடைப்பை நீக்கி சுகாதாரமான குடிநீா் வழங்க, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com