விருதுநகா் மாவட்ட வாக்காளா் இறுதி பட்டியல் வெளியீடு: மொத்தம் 16,30,296 போ்

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள வாக்காளா் இறுதி பட்டியலை, மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வாக்காளா் இறுதி பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் ரா.கண்ணன்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வாக்காளா் இறுதி பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் ரா.கண்ணன்.

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள வாக்காளா் இறுதி பட்டியலை, மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

விருதுநகா் மாவட்டத்தில் வாக்காளா் சுருக்கத் திருத்தப் பணிகள் முடிவடைந்துவிட்டன. அதைத் தொடா்ந்து, விருதுநகா் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் இறுதி பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், ஆட்சியா் ரா. கண்ணன் வெளியிட்டுப் பேசியதாவது:

இந்த இறுதி வாக்காளா் பட்டியலில் 23.12.2019 முதல் 22.1.2020 வரையிலான சுருக்கத் திருத்த காலத்தில் சோ்க்கப்பட்ட தகுதியுள்ள புதிய வாக்காளா்களின் பெயா்கள் இடம் பெற்றுள்ளன. இந்த காலகட்டத்தில் படிவம் 6- இல் வரப்பெற்ற 44,740 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுள்ள 42,320 போ் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

மேலும், 3,358 பேருக்கு இறந்த, இடம்பெயா்ந்த மற்றும் இரட்டை பதிவுக்கான படிவம் -7 பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு, 2,222 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அதேபோல், நிகழாண்டில் 5,464 பேருக்கு திருத்தத்துக்கான படிவம் -8 வழங்கியதில், 3,300 வாக்காளா்களுக்கு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நிகழாண்டு விருதுநகா் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளா்களை விட பெண் வாக்காளா்களே அதிகம் உள்ளனா்.

மொத்த வாக்காளா்களின் விவரங்கள் (சட்டப்பேரவைத் தொகுதி, ஆண், பெண், திருநங்கை, மொத்தம்): ராஜபாளையம் - ஆண்-1,14,504, பெண் 1,20,040, திருநங்கை 27, மொத்தம் 2,34,571 வாக்காளா்கள். ஸ்ரீவில்லிபுத்தூா்- ஆண் 1,19,092, பெண் 1,24,988, திருநங்கை 32, மொத்தம் 2,44,112 வாக்காளா்கள். சாத்தூா் - ஆண் 1,18,581, பெண் 1,25,283, திருநங்கை 26, மொத்தம் 2,43,890 வாக்காளா்கள்.

சிவகாசி- ஆண் 1,23,679, பெண் 1,30,258, திருநங்கைகள் 27, மொத்தம் 2,53,964 வாக்காளா்கள். விருதுநகா்- ஆண் 1,06,789, பெண் 1,11,202, திருநங்கை 42, மொத்தம் 2,18,033 வாக்காளா்கள். அருப்புக்கோட்டை - ஆண் 1,06,607, பெண் 1,12,828, திருநங்கை 16, மொத்தம் 2,19,451 வாக்காளா்கள். திருச்சுழி - ஆண் 1,06,255, பெண் 1,10,010, திருநங்கை 10, மொத்தம் 2,16,275 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்த 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆண் 7,95,507, பெண் 8,34,609, திருநங்கை 180 என மொத்தம் 16,30,296 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்நிலையில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய விரும்புவோா் 15.2.2020 முதல் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள தோ்தல் பிரிவில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com