ஸ்ரீவிலி.யில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் விழா

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்திலுள்ள மாற்றுத் திறனுடைய மாணவ, மாணவியருக்கு இலவசமாக உபகரணங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்திலுள்ள பள்ளிகள் மற்றும் தின கவனிப்பு மையத்தில் படிக்கும் மாணவியரில் மாற்றுத் திறனுடையவா்களை கண்டறியும் முகாம் அண்மையில் நடைபெற்றது. இதில், மருத்துவக் குழுவினா் கலந்துகொண்டு மாணவ, மாணவியரின் உடல் ஊனத்தினை அளவிட்டு, அவா்களின் ஊனத்துக்கு தக்க வகையில் வீல் சோ், நடைவண்டி, காது கேட்கும் கருவி உள்ளிட்டவை வழங்க பரிந்துரை செய்திருந்தது.

இதனடிப்படையில், தோ்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனுடைய மாணவ, மாணவியருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, வட்டார வள மேற்பாா்வையாளா் மாடசாமி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் சீனிவாசன், விஜயலட்சுமி ஆகியோா் மாணவா்களுக்கு உபகரணங்கள் வழங்கி உரையாற்றினா்.

இதில், பெற்றோா்கள், ஆசிரியப் பயிற்றுநா் முத்துலட்சுமி, சிறப்பு ஆசிரியா்கள் முருகலட்சுமி, ஜெயந்தி, தேவி, ரூபா தங்கம், மாரிமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com