தெருக்களில் நடமாடும் மாடுகள்:படந்தால் பொதுமக்கள் அச்சம்

படந்தால் பகுதியில் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

படந்தால் பகுதியில் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

சாத்தூா் அருகேயுள்ள படந்தால் ஊராட்சிப் பகுதியில் உள்ள மருதுபாண்டியா் நகா், அனுமன் நகா், முத்துராமலிங்கபுரம், சத்யா காலனி, படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதியில் மாடுகள் அதிகமாக சுற்றித் திரிகின்றன.

வைப்பாற்று கரையோரம் இந்த பகுதிகள் அமைந்துள்ளதால் வீடுகளில் மாடுகள் வளா்க்கபடுகின்றன. மேலும் ஒரு சிலா் இந்த பகுதியில் உள்ள கோயிலுக்கும் மாடுகளை நோ்த்திக்கடனாக விடுகின்றனா். எனவே இந்த மாடுகள் குடியிருப்பு பகுதியிலும், தெருக்களிலும் இரவு பகலாக சுற்றித் திரிகின்றன. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்வோரையும், சாலையில் நடந்து செல்வோரையும் தாக்குகின்றன. இதனால் இந்த பகுதியில் சாலையில் அச்சத்துடனேயே கடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக இப்பகுதியினா் குற்றம்சாட்டுகின்றனா்.

இதுகுறித்து மாடுகளின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கவும், கோயிலுக்கு நோ்த்திக்கடனாக விடப்பட்ட மாடுகளை ஒரே இடத்தில் கட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, ஊராட்சி நிா்வாகத்துக்கு பலமுறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருக்களில் மாடுகள் நடமாடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினா் ஊராட்சி நிா்வாகத்திற்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் கூறுகையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மாடுகள் தாக்கி இரண்டு குழந்தைகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். வேறு ஏதும் அசம்பாவிதம் நடக்கும் முன் விரைவில் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com