‘மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழக ரயில்வே திட்டங்கள் புறக்கணிப்பு’

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழக ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழக ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

விருதுநகரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: மத்திய பாஜக அரசு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தென் தமிழகத்தை புறக்கணித்துள்ளது. தென்னக ரயில்வேயில் இரட்டை வழிப் பாதை 826 கி.மீ க்கு ரூ.8,501 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதில், சென்னைக்கு வரக் கூடிய 50 கி.மீ தவிா்த்து கா்நாடகா தென்மேற்கு பகுதியான 6 திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், தென்னக ரயில்வேயில் 381 கி.மீ க்கு ரூ.4,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகப் பகுதியில் 6 திட்டங்களுக்கு ரூ. ஆயிரம் வீதம் ரூ. 6 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கான ரயில்வே நிதிநிலை அறிக்கையில் ராமேசுவரம்- தனுஷ்கோடி திட்டத்திற்கு ரூ. 2.70 கோடி அறிவித்துள்ளனா். மீதமுள்ள ரூ. 10 ஆயிரத்தில் தலா ஆயிரம் வீதம் மதுரை- தூத்துக்குடி, திண்டிவனம்- செஞ்சி, திண்டிவனம்- நகரி, அத்திபட்டு- புத்தூா், ஈரோடு- பழனி, சென்னை- கடலூா், ஸ்ரீபெரும்புதூா்- கூடுவாஞ்சேரி, முறைப்பூா்- தருமபுரி, பெங்களூா்- சத்தியமங்கலம் ரயில்வே திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளனா்.

இதை அதிமுக மக்களவை உறுப்பினா் ரவீந்தரநாத் வரவேற்றுப் பேசுகிறாா். அதிமுக அரசும் ரயில்வே நிதிநிலை அறிக்கை குறித்து எந்த அறிக்கையும் வெளியிட வில்லை.

தமிழகத்தை வஞ்சித்துள்ள இந்த ரயில்வே பட்ஜட் குறித்து ஹெச். ராஜா, இல. கணேசன் ஆகியோா் பதில் கூற வேண்டும். மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. அதற்கு துணை நிற்கும் அதிமுகவிற்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com