சிவகாசியில் விவசாயிகள் குறை தீா்க்கும் முகாம்

சிவகாசியில் விவசாயிகள் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகாசியில் விவசாயிகள் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகாசி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, சிவகாசி சாா்-ஆட்சியா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில், சிவகாசி, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.

பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியைச் சோ்ந்த எரிச்சநத்தம் ரெங்கராஜா, பிரதமரின் விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து, தகுதியான விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால், மக்காச்சோளம் மற்றும் நெல் விளைச்சல் இல்லை. எனவே, இதில் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும். ரு.5 லட்சம் வரை விவசாயிகள் மருத்துவக் காப்பீடு செய்ய முகாம் அமைத்து விவசாயிகளை காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

இதற்கு சாா்-ஆட்சியா், இக்கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதில், வட்டாட்சியா் ரெங்கநாதன் மற்றும் வேளாண் துறை அலுவலா்களும் மற்றும் மம்சாபுரம் இருளப்பன், வாடியாா் கணேசன், திருத்தங்கல் அழகா்சாமி உள்பட பல விவசாயிகளும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com