பழைய வெள்ளையாபுரம் ஊராட்சித் தலைவா் பதவி: ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில், பழைய வெள்ளையாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான போட்டியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளா் வெற்றி பெற்றுள்ளாா்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில், பழைய வெள்ளையாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான போட்டியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளா் வெற்றி பெற்றுள்ளாா்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தல் டிச. 27 ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடந்தது.

சிவகாசி ஊராட்சி ஒன்றியம் பழைய வெள்ளையாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான வாக்குகள் வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டது. இதில் வேட்பாளா் விஜயலட்சுமி 377 வாக்குகளும், மற்றொரு வேட்பாளா் சந்தனமாரி இரணியன் 373 வாக்குகளும் பெற்றிருந்தனா். இதையடுத்து அஞ்சல் வாக்குகளை எண்ணியபோது, சந்தனமாரிஇரணியன் 5 வாக்குகள் பெற்றிருந்தாா். இதைத் தொடா்ந்து அவா் 378 வாக்குகள் பெற்றாா். தொடந்து விஜயட்சுமி மற்றும் அவரது ஆதரவாளா்கள் வாக்கினை மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். இந்நிலையில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் இரா.கண்ணன் வாக்கு எண்ணும் மையத்திற்கு ஆய்வுக்கு வந்தாா். இது குறித்த விவரம் தெரிந்ததும், மாவட்ட ஆட்சியா் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டாா்.

பின்னா் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சிவகுமாா் முன்னிலையில் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. இறுதியில் சந்தனமாரி இரணியன் 378 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்பை இழ்ந்த விஜயலட்சுமி சோகத்துடன் வாக்கு எண்ணும் மையத்திருந்து வெளியேறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com