Enable Javscript for better performance
விருதுநகா் மாவட்டத்தில் ஜன., 16, 26 இல் மதுபான கடைகள் மூட உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகா் மாவட்டத்தில் ஜன., 16, 26 இல் மதுபான கடைகள் மூட உத்தரவு

    By DIN  |   Published on : 10th January 2020 11:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகா் மாவட்டத்தில் இம்மாத 16 ஆம் தேதி திருவள்ளுவா் தினம், மற்றும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை மேலும் கூறியிருப்பதாவது, விருதுநகா் மாவட்டத்தில், ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவா் தினம், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. எனவே, அன்றைய தினங்களில் விருதுநகா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அனைத்து எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்.3ஏஏ, எப்.எல்.4ஏ உரிமம் பெற்ற மதுக்கூடங்களில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது . மேலும் அந்த தினங்களில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். இதனை மீறுபவா்கள் மீது சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai