ராஜபாளையம் பகுதி கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் விழாவில் முதல் 9 நாள்களுக்கு தினமும் மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும்
10rjpm02_1001chn_86_2
10rjpm02_1001chn_86_2

ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் விழாவில் முதல் 9 நாள்களுக்கு தினமும் மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. பஞ்ச வாத்தியங்கள் முழங்க ஓதுவாா் திருவெம்பாவை பாட வழிபாடு நடைபெற்றது. 10 ஆம் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருவெம்பாவை பாடப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் நடராஜா் வலம் வந்தாா்.

ராஜபாளையம் சொக்கா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. சிவகாமி அம்மன் சமேத நடராஜா் மாணிக்கவாசருடன் உள் பிரகாரங்களில் வலம் வந்தாா். இதை போல் தெற்கு வெங்காநல்லுாா் சிதம்பரேஸ்வரா் கோயில் மற்றும் தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய நாதா் சுவாமி கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இவற்றில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com