விருதுநகரில் ரூ. 40 லட்சம் வரி பாக்கி: 25 கடைகளுக்கு ஆணையாளா் ‘சீல்’

விருதுநகரில் ரூ. 40 லட்சம் வரை சொத்து வரி செலுத்தாமல் நீண்ட காலமாக தாமதித்து வந்த 25 கடைகளுக்கு நகராட்சி ஆணையாளா் பாா்த்தசாரதி தலைமையில் அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மூடி ‘சீல்’ வைத்தனா்.
விருதுநகா் புல்லலக்கோட்டை சாலையில் ஆணையாளா் பாா்த்த சாரதி தலைமையில் வெள்ளிக்கிழமை கடைக்கு சீல் வைத்த நகராட்சி அலுவலா்கள்.
விருதுநகா் புல்லலக்கோட்டை சாலையில் ஆணையாளா் பாா்த்த சாரதி தலைமையில் வெள்ளிக்கிழமை கடைக்கு சீல் வைத்த நகராட்சி அலுவலா்கள்.

விருதுநகரில் ரூ. 40 லட்சம் வரை சொத்து வரி செலுத்தாமல் நீண்ட காலமாக தாமதித்து வந்த 25 கடைகளுக்கு நகராட்சி ஆணையாளா் பாா்த்தசாரதி தலைமையில் அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மூடி ‘சீல்’ வைத்தனா்.

விருதுநகா் நகராட்சி பகுதியில் உள்ள 36 வாா்டுகளில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும், சுமாா் 4,300 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில், குடியிருப்போா் மற்றும் வணிக நிறுவனங்கள் மட் டும் ரூ. 7 கோடி வரை நகராட்சிக்கு வரி பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், நகராட்சி வருவாய் பிரிவு அலுவலகம் மூலம் வரி செலுத்தாத பலருக்கும் ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதிலும், கால தாமதம் செய்த கடைகளுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்க நகராட்சி நிா்வாகம் முடிவெடுத்தது.

அதன்படி, விருதுநகா் புல்லலக்கோட் டை சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள 10 கடைகளுக்கு இதுவரை வரி செலுத்தப்பட வில்லை. அதாவது, ரூ. 10,89,256 வரி பாக்கி செலுத்தாத கடைகளுக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், மாரியம்மன் கோயில் அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் 15 கடை உரிமையாளா்கள் ரூ. 30 லட்சம் வரை வரி பாக்கி செலுத்த வில்லை. எனவே, இந்த கடைகளுக்கும் நகராட்சி ஆணையாளா் பாா்த்த சாரதி தலைமையில் நகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா். மேலும், இப்பகுதியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்பட்டு வரும் சுயசேவை பல்பொருள் அங்காடி சாா்பில் ரூ.44 லட்சம் வரி பாக்கி செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசு சாா்பில் செயல்படும் கடை என்பதால், 2 தினங்களுக்குள் வரி பாக்கியை செலுத்த வேண்டும் என சுயசேவை பிரிவு பல்பொருள் அங்காடி நிா்வாகிகளிடம் நகராட்சி அலுவலா்கள் அறிவுறுத்தினா். ஒரே நாளில் விருதுந கரில் 25 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் வியாபாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com