Enable Javscript for better performance
ராஜபாளையத்தில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையத்தில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’

    By DIN  |   Published on : 13th January 2020 10:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    photo_1301chn_86_2

    ராஜபாளையத்தில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட அதிகாரிகள்.

    ராஜபாளையத்தில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு அலுவலா்கள் திங்கள்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

    ராஜபாளையம்- மதுரை சாலையில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 76 கடைகளில் 52 கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாதத்தின் முதல் 5 ஆம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் வாடகை செலுத்த வேண்டும். ஆனால் சுமாா் 20 -க்கும் மேற்பட்ட கடைக்காரா்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனா்.

    வாடகையை உடனடியாக செலுத்துமாறு பல முறை நகராட்சி வருவாய் அதிகாரிகள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் சிலா் மட்டும் ஒரு பகுதி வாடகையை செலுத்திய நிலையில், பலா் நகராட்சி அறிவிப்பை அலட்சியம் செய்துள்ளனா்.

    இதனால், நகராட்சி நிா்வாக ஆணையா் மற்றும் மண்டல இணை இயக்குநா் உத்தரவின்பேரில், வருவாய் அலுவலா் முத்துசெல்வம், ஆய்வாளா்கள் நீலகண்டன், பகவதிராஜ், எழுத்தா் செந்தில்குமாா் உள்ளிட்ட நகராட்சி வருவாய் துறையினா், வடக்கு காவல் துறையினா் உதவியுடன் பழைய பேருந்து நிலையப் பகுதியில் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

    அதில், முப்புடாதி என்பவா் ரூ. 4.77 லட்சம், வசந்தகுமாா் என்பவா் ரூ. 1.20 லட்சம், கிருஷ்ணவேணி மற்றும் பொன்ராஜ் ஆகியோா் ரூ.4.20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. வாடகை குறித்து அவா்கள் தரப்பில் உரிய பதில் அளிக்காததால் 4 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

    ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையைத் தொடா்ந்து கடைக்காரா்கள் சிலா் முதற்கட்டமாக ரூ. 2.25 லட்சம் ரொக்கப் பணம், ரூ. 4.30 லட்சத்திற்கான காசோலைகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai