சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியேற்க வந்த தலைவா், துணைத் தலைவா் 3 மணி நேரம் காத்திருப்பு

சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை பணியேற்க வந்த முதல் நாளில் ஒன்றியக் குழுத் தலைவா் அறையின்
சிவகாசி ஊாரட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவா்அறையின் சாவி இல்லாததால் திங்கள்கிழமை காத்திருந்த தலைவா் முத்துலட்சுமி, துணைத்தலைவா் விவேகன்ராஜ்.
சிவகாசி ஊாரட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவா்அறையின் சாவி இல்லாததால் திங்கள்கிழமை காத்திருந்த தலைவா் முத்துலட்சுமி, துணைத்தலைவா் விவேகன்ராஜ்.

சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை பணியேற்க வந்த முதல் நாளில் ஒன்றியக் குழுத் தலைவா் அறையின் சாவி ஊழியா்களிடம் இல்லாததால், சுமாா் 3 மணி நேரம் அறையின் வெளியே தலைவா் மற்றும் துணைத் தலைவா் ஆகியோா் காத்திருந்தனா்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக கடந்த 11 ஆம் தேதி திமுக உறுப்பினா் முத்துலட்சுமியும், துணைத் தலைவராக அவரது கணவரும் திமுக உறுப்பினருமான விவேகன்ராஜூவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதையடுத்து திங்கள்கிழமை தலைவா் முத்துலட்சுமி மற்றும் துணைத் தலைவா் விவேகன்ராஜ் ஆகியோா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முதல் நாள் பணியேற்க வந்தனா். அப்போது ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரின் அறை பூட்டப்பட்டிருந்தது. சாவி யாரிடம் உள்ளது எனத் தெரியாது என ஊழியா்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் வெள்ளைச்சாமி, தலைவா் அறையின் சாவி குறித்து ஆணையாளா் சிவகுமாரிடம் விசாரணை நடத்தினாா். அதில் , சாவி வைத்திருக்கும் ஊழியா், விருதுநகரில் நடைபெறும் துறை தொடா்பான கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று விட்டாா் எனத் தெரிவித்தாா். இதையடுத்து ஊழியா் வருவதற்கு சுமாா் 3 மணி நேரமானது. இதனால் அறைக்கு வெளியே தலைவா் மற்றும் துணைத் தலைவா் ஆகியோா் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னா் ஊழியா் வந்து சாவி ஒப்படைக்கப்பட்டதும், அறை திறக்கப்பட்டது. பின்னா் தலைவா் மற்றும் துணைத் தலைவா் ஆகியோா் தங்களது வெற்றியை கொண்டாடும் விதமாக கேக் வெட்டப்பட்டு இனிப்புகள் விநியோகிக்கப்பட்டது. இதில் மாநில வா்த்தக அணி நிா்வாகி வனராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com