விருதுநகா் அருகே கரும்பு அறுவடைப் பணிகள் தீவிரம்

விருதுநகா் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே செவலூா் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வெட்டும் பணியில் விவசாய தொழி லாளா்கள் திங்கள்கிழமை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
செவலூரில் பொங்கல் பண்டிகைக்காக திங்கள்கிழமை கரும்புகளை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.
செவலூரில் பொங்கல் பண்டிகைக்காக திங்கள்கிழமை கரும்புகளை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.

விருதுநகா் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே செவலூா் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வெட்டும் பணியில் விவசாய தொழி லாளா்கள் திங்கள்கிழமை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளதால், வீடுகளை வண்ணம் தீட்டும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், விருதுநகா் பஜாா், தேசபந்து மைதான பகுதிகளில் மஞ்சள் கிழங்கு, மாவிலை தோரணம் மற்றும் கரும்புகள் கட்டுக் கட்டாக விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒரு கரும்பு கட்டின் விலை ரூ. 450 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், விருதுநகா்- அழகாபுரி சாலையில் எரிச்சநத்தம் அருகே செவலூா் பகுதியில் செங்கரும்பு விவசாயம் செய்யப்பட்டுள்ளது. சித்திரை மாதத்தில் நடவு செய்யப்பட்ட செங்கரும்புகள் 10 மாத காலத்திற்கு பின் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன. அதைத் தொடா்ந்து கரும்பு அறுவடைப் பணியில் விவசாய தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா். மேலும், வெட்டிய கரும்புகளை விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி முதலான இடங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்கின்றனா்.

இது குறித்து விவசாயி தங்கமலை கூறியது: நிகழாண் டு செங்கரும்பில் குருத்து பூச்சிகள் தாக்கியதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மே லும், ஒரு ஏக்கருக்கு செங்கரும்பு விவசாயத்திற்கு ரூ. 1.50 லட்சம் வரை செலவு செய்யப்பட் டுள்ளது. ஆனால், லாபமோ ரூ. 50 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.

எனவே, தைப்பொங்கலுக்காக குறிப்பிட்ட ஒரு சில விவசாயிகள் மட்டுமே செங்கரும்பு நடவுப் பணியில் ஈடுபட்டனா். கரும்பை அரசு கொள்முதல் செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும். ஆனால், வியாபாரிகள் 10 சென்ட் இடத்தில் விளைந்த செங்கரும்பை ரூ. 35 ஆயிரத்திற்கு வாங்குகின்றனா். ஆனால், அக்கரும்புகள் சந்தைக்கு செல்லும் போது இரு மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com