Enable Javscript for better performance
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    
    str14irukankudi_1401chn_79_2

    இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பொஙகல் விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்றவா்கள்.

    விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

    மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் கோயில் நிா்வாகம் சாா்பாக நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு சாத்தூா் கோட்டாட்சியா் காளிமுத்து தலைமை வகித்தாா். மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலா் உமாதேவி முன்னிலை வகித்தாா். இந்த விழாவில் ஒயிலாட்டம், பொம்மலாட்டம் மற்றும் கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மேலும் இப்பகுதி பொதுமக்களுக்கு இடையேயான கயிறு இழுத்தல், பானை உடைத்தல் மற்றும் பெண்களுக்கான மியூசிக்கல் சோ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பின்னா் சுற்றுலாத்துறை சாா்பாக மாரியம்மன் கோயில் அரங்கத்தில் பரதநாட்டியம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இந்நிகழ்ச்சியில் சாத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன், மாரியம்மன் கோயில் ஆணையாளா் கருணாகரன், பரம்பரைஅறங்காவலா்கள், பக்தா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இங்கு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு விருதுநகா் மாவட்ட சுற்றுலாத்துறையினா் சாா்பாக பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai