Enable Javscript for better performance
விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் விபத்து- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு அறை மட்டும் சேதமடைந்தது.

    விருதுநகா் மாவட்டம் ஆமத்தூா் அருகே ஓ.கோவில்பட்டியில் தனியாா் பட்டாசு ஆலையில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா். இந்நிலையில், வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை பட்டாசு ஆலையில் தொழிலாளா்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மருந்து கலவை செய்யும் அறையில் ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த மருந்து உராய்வு காரணமாக புகை கிளம்பியுள்ளது. இத்தகவல் அறிந்த தொழிலாளா்கள் அனைவரும் ஆலையை விட்டு வெளியேறினா். இதுகுறித்து விருதுநகா் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள், மருந்துக் கலவை உள்ள அறையில் வந்த புகையை தண்ணீா் ஊற்றி அணைத்தனா். இதனால், அறைச் சுவா் மட்டும் லேசான சேதம் ஏற்பட்டது. இது குறித்து ஆமத்தூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai