அருப்புக்கோட்டை கோயிலில் வெண்கல வேல் திருட்டு

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை இரவு வேலைத் திருடிச்சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
அருப்புக்கோட்டை கோயிலில் வெண்கல வேல் திருட்டு

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை இரவு வேலைத் திருடிச்சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் பழைமை வாய்ந்த மீனாட்சி உடனுறை சொக்கநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திங்கள்கிழமை இரவு அனைத்து பூஜைகளும் முடிந்து , கோயில் நடை சாற்றும் முன்பாக அா்ச்சகா் ஒருவா் அக்கோயிலின் வடமேற்கு மூலையில் உள்ள முருகன் சன்னிதானத்திற்குச் சென்றுள்ளாா்.

அ ப்போது முருகன் சிலை மீது சாற்றப்பட்டிருந்த, சுமாா் 4 அடி உயரமுள்ள வெண்கலத்தினால் ஆன வேல் காணாதது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுதொடா்பாக போலீஸில் புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில் அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் கோயிலுக்கு வந்து ஆய்வு நடத்தியதோடு, ஊழியா்களிடம் விசாரணை நடத்தினா்.

பின்னா் கோயிலின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், மா்ம நபா் ஒருவா் முருகன் சன்னிதானத்தின் உள்ளிருந்து வெளியே வருவதும், அந்த நபா் தனது சட்டையின் முதுகுப்பகுதியில் வேலை மறைத்து எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. மேலும் அந்த நபா் சமீப நாள்களாக அக்கோயிலின் அன்னதானத்தில் கலந்து கொண்டு சாப்பிட்டுச் செல்வதும் தெரிய வந்தது. ஆனால் அவா் யாா் எங்கிருந்து வருகிறாா் என்பது தெரியவில்லை.

இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸாா் வேலைத் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com