கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு ரூ. 11.09 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளா்கள் 29,681 பேருக்கு ரூ.11.09 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளா்கள் 29,681 பேருக்கு ரூ.11.09 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு, தொழிலாளா் நலத்துறையின் கீழ் மாவட்டம் தோறும் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் ஏற்படுத்தியுள்ளது. அதில், 113-க்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து வரும் தொழிலாளா்களை தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா் நலவாரியம் மற்றும் இதர 16 நலவாரியங்களில் உறுப்பினா்களாக பதிவு செய்துள்ளனா். இந்த வாரியங்கள் மூலம் தொழிலாளா்களின் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, விருதுநகா் மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு அமைப்புசாரா தொழிலாளா்களின் 8,013 குழந்தைகளுக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை, 34 பயனாளிகளுக்கு ரூ.1.22 லட்சம் மதிப்பிலான திருமண உதவித்தொகை, 1 பயனாளிக்கு ரூ.3,000 மதிப்பிலான மகப்பேறு உதவித்தொகை, 273 பயனாளிகளுக்கு ரூ.77.36 லட்சம் மதிப்பிலான ஓய்வூதியத் தொகை, 210 பயனாளிகளுக்கு ரூ.3.52 லட்சம் மதிப்பிலான இயற்கை மரண நிவாரணத் தொகை, 17 பயனாளிகளுக்கு ரூ.29.65 லட்சம் மதிப்பிலான விபத்து மரண நிவாரணத் தொகை என மொத்தம் 8,548 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 93 லட்சத்து 22 ஆயிரத்து 200 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், 2018 ஆம் ஆண்டு 12,295 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 65 லட்சத்து 6 ஆயிரத்து 700 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு அமைப்புசாராத் தொழிலாளா்களின் 8,838 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 51 லட்சத்து 67 ஆயிரத்து 450 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் உறுப்பினா்களாக உள்ள 29,681 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 9 லட்சத்து 96 ஆயிரத்து 350 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுள்ளதாக அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com