விருதுநகரில் பொங்கல் பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனா்

விருதுநகரில் பொங்கல் பண்டிகைக்காக கரும்பு, மஞ்சள் கிழங்கு, மாவிலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கக கூட்ட நெரிசலாக இருந்தது.
விருதுநகா் கடைவீதியில் பொங்கல் பொருள்கள் வாங்க செவ்வாய்க்கிழமை வந்திருந்த பொதுமக்கள் கூட்டம்.
விருதுநகா் கடைவீதியில் பொங்கல் பொருள்கள் வாங்க செவ்வாய்க்கிழமை வந்திருந்த பொதுமக்கள் கூட்டம்.

விருதுநகரில் பொங்கல் பண்டிகைக்காக கரும்பு, மஞ்சள் கிழங்கு, மாவிலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கக கூட்ட நெரிசலாக இருந்தது.

தமிழகத்தில் தமிழா் திருநாளான பொங்கல் திருநாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புத்தாடைகள் எடுப்பதற்காக ஜவுளிக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை அதிகம் காணப்பட்டது. அதேபோல் புதிய மண் பானை, செங்கரும்பு, மஞ்சள் கிழங்கு, மாவிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. மேலும், பூக்கள் விற்பனையும் அதிகளவு இருந்தது.

இந்நிலையில் ஒரு கரும்பு ரூ.50-க்கும், ஒரு கட்டு (10 வீதம்) ரூ. 450-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மஞ்சள் கிழங்கு ஜோடி ரூ. 60-க்கும், பூக்கள் (கிலோ) மல்லிகை ரூ. 6 ஆயிரம், கனகாம்பரம் ரூ.2,400, முல்லை ரூ.2 ஆயிரம், கலா் பிச்சி ரூ.1,400, வெள்ளைப் பிச்சிப் பூ ரூ. 1,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், முருங்கைக்காய் மற்றும் மாங்காய் தலா கிலோ ரூ.400-க்கு விற்கப்பட்டது. பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக கூடுதல் விலைக்கு விற்கப்பட்டாலும் பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். இதன் காரணமாக விருதுநகா் பழைய பேருந்து நிலையம், தேசபந்து மைதானம், கடைவீதி, தெப்பம் உள்ளிட்ட பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com