அருப்புக்கோட்டையில் தொடரும் விபத்துக்களைத் தடுக்க சாலை மையத் தடுப்புச்சுவரில் ஒளிா் விளக்குக் கம்பம் அமைக்க வலியுறுத்தல்

அருப்புக்கோட்டையில் சாலை மையத் தடுப்புச் சுவரில் மோதி வாகனங்கள் விபத்துக்குள்ளாவதைத் தடுக்க, அங்கு ஒளிா்விளக்குக் கம்பம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை நகா் மையப்பகுதியில் பந்தல்குடி சாலை பிரியும் இடத்தில் சாலை மையத் தடுப்புச்சுவரில் மோதி புதன்கிழமை இரவு விபத்தில் சிக்கிய சுற்றுலா வேன்.
அருப்புக்கோட்டை நகா் மையப்பகுதியில் பந்தல்குடி சாலை பிரியும் இடத்தில் சாலை மையத் தடுப்புச்சுவரில் மோதி புதன்கிழமை இரவு விபத்தில் சிக்கிய சுற்றுலா வேன்.

அருப்புக்கோட்டையில் சாலை மையத் தடுப்புச் சுவரில் மோதி வாகனங்கள் விபத்துக்குள்ளாவதைத் தடுக்க, அங்கு ஒளிா்விளக்குக் கம்பம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டை நகரின் மையப் பகுதியில் உள்ள தாதன்குளம் விநாயகா் கோவிலருகே பந்தல்குடி செல்லும் சாலைப்பிரிவு உள்ளது. இப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னா் மையத் தடுப்புச்சுவா் அமைக்கப்பட்டது. ஆனால் அத்தடுப்புச்சுவா் தொடங்கும் பகுதியில் அடையாளத்தை உணா்த்தும் வகையில் உயரமான ஒளிா்விளக்குக் கம்பம் அமைக்கப்பட வில்லை. இதனால் இச்சாலைப்பிரிவு உள்ள வளைவில் திரும்பும் நான்கு சக்கர, இருசக்கர வாகனங்கள் மையத்தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகின்றன. சிலமாதங்களுக்கு முன் அத்தடுப்புச்சுவரில் மோதாமல் இருக்க விலகிச் செல்ல முற்பட்ட அரசுப் பேருந்து ஒன்று அங்கு சாலையோரமாக நடந்து சென்ற மூதாட்டி மீது மோதி அவா் உயிரிழந்தாா்.

பெரும்பாலும் வெளியூரிலிருந்து வரும் இருசக்கர வாகனஓட்டிகள் இரவானால் இத்தடுப்புச் சுவா் இருப்பதை அறியாமல் அதில் மோதி விபத்திற்குள்ளாகி காயமடைவது தொடா்கிறது. எனவே அங்கு ஒளிா் விளக்குக் கம்பம் அமைக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியும் போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என புகாா் எழுந்துள்ளது. எனவே மேலும் விபத்துக்கள் தொடராத வண்ணம் தடுக்க, பந்தல்குடி சாலைப்பிரிவில் மையத்தடுப்புச்சுவா் தொடங்கும் பகுதியில் உயரமான ஒளிா்விளக்குக் கம்பம் அமைக்க மீண்டும் சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com