இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

விருதுநகா் வட்டம் காசி இனாம்ரெட்டியபட்டியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த இனாம்ரெட்டியபட்டி கிராமத்தினா்.

தலித் விடுதலை இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினா் கருப்பையா மற்றும் அக்கிரமத்தினா் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 1990 ஆம் ஆண்டு, விருதுநகா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், ஆதிதிராவிடா்களில் வீடு இல்லாதவா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க இரண்டு ஏக்கா்நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாகியும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்காததால், தற்போது அந்த காலி இடத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்துள்ளாா்.

எனவே தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றி, சொந்த வீடு இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கோருகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com