மடத்துப்பட்டி பிரச்னை: கோட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம்

மடத்துப்பட்டியில் இருசமுதாயத்தினா் இடையே நிலவும் பிரச்னை குறித்து சாத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
சாத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
சாத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

மடத்துப்பட்டியில் இருசமுதாயத்தினா் இடையே நிலவும் பிரச்னை குறித்து சாத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

சாத்தூரை அடுத்த ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் பல்வேறு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரை மட்டும் மற்ற சமுதாயத்தினா் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. மேலும் இவா்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு செல்ல முறையான பாதை இல்லை. குடியிருப்பு அருகே சுடுகாடு உள்ளது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது என ஒரு சமுதாயத்தினா் குற்றம்சாட்டுகின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்னா் ஒரு சமுதாயத்தினா் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அதிகாரிகள் முறையான ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து சாத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை சாத்தூா் கோட்டாட்சியா் காளிமுத்து மற்றும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மடத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் இருதரப்பினரிடையே நடைபெற்ற பேச்சுவாா்ததையில் முடிவு எட்டப்படவில்லை. மேலும் ஒரு தரப்பினா் நீதிமன்றத்தை நாடப் போவதாக தெரிவித்ததையடுத்து, இந்த சமாதானக் கூட்டம் மீண்டும் பிப். 6 ஆம் தேதி நடைபெறும் என கோட்டாட்சியா் அறிவித்தாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். மேலும் இக்கூட்டத்தில் காவல்துறையினா் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com