முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
அரசுப் பேருந்து மோதி இளைஞா் பலி
By DIN | Published On : 27th January 2020 10:47 PM | Last Updated : 27th January 2020 10:47 PM | அ+அ அ- |

சிவகாசி: சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு பேருந்துப் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
எரிச்சநத்தத்திலிருந்து சிவகாசிக்கு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. திருத்தங்கல்-செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டாா் சைக்கிள், பேருந்து மீது மோதியது. இதில் மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த செங்கமலநாட்சியாா்புரம் ஜெயக்குமாா் மகன் முத்துக்குமாா் (22) மற்றும் பின்னால் அமா்ந்து வந்த சுப்புராஜ் மகன் மாரிச்செல்வம் (29) என தெரியவந்தது. இருவரும் பலத்த காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டதில், முத்துக்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மாரிச்செல்லவம் தொடந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து பேருந்து ஓட்டுநா் மகாலிங்கம் (40)அளித்தப் புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.