முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
அருப்புக்கோட்டை, சாத்தூரில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
By DIN | Published On : 27th January 2020 07:32 AM | Last Updated : 27th January 2020 07:32 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை இரவு திமுக சாா்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் திமுக சாா்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அருப்புக்கோட்டை முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், நகரச் செயலாளா் ஏ.கே.மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இளைஞரணிச் செயலாளா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ரமேஷ், தலைமைக் கழக பேச்சாளா் பா.கோ.குமாா், கம்பம் செல்வேந்திரன், மாவட்டசெயற்குழு உறுப்பினா் கே.கே.எஸ்.வி.டி.சுப்பாராஜ் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து விருதுநகா் தெற்கு மாவட்டச் செயலாளரும், அருப்புக்கோட் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசியது:
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தாமிரவருணிக் கூட்டுக்குடிநீா்த் திட்டத்தை, அடுத்து வந்த அதிமுக அரசு கிடப்பில் போட்டது. இருப்பினும் அருப்புக்கோட்டை, விருதுநகா், சாத்தூா் ஆகிய 3 ஊா்களுக்கும் சோ்த்து தாமிரவருணிக் குடிநீரைக் கொண்டு வந்துள்ளேன். இந்த வெற்றியை அதிமுகவினா் தமதாக்கிக் கொள்ள விரும்புகின்றனா் என்றாா். இந்நிகழ்ச்சியில் நகர, ஒன்றிய திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
சாத்தூா்: சாத்தூா் வடக்குரத வீதியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்திற்கு நகரச் செயலாளா் குருசாமி தலைமை வகித்தாா். அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமசந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மொழிப்போா் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திப் பேசினாா். இக்கூட்டத்தில் நகர, ஒன்றிய திமுக நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.